எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒன்றரை நாள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீடு திரும்பிய பின்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி பண்டராகமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சென்று வீடு திரும்பிய பின்னரே குறித்த நபருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த நபர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts