எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரண- அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 63 வயதுடை நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீசல் பெறுவதற்காக சுமார் ஏழு நாட்களாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts