எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இல்லை விவசாயிகள் சிரமம்

பரந்தன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் இன்மையால், தருமபுரம் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஏ-9 வீதியில் பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி வாவியடி பகுதியில் இருந்து, பரந்தன் பகுதி வரையான 23 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே எரிபொருள் நிரப்பு நிலையமாகும்.

தருமபுரம் விவசாயிகள், இவ்எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே எரிபொருளை பெற்றுக் கொள்கின்றனர். தற்போது நிலவும் வரட்சியினால் பயிர் செய்கைகளுக்கு நீர் இறைக்கும் விவசாயிகள், மற்றும் வாகன சாரதிகள், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறித்த பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், கடந்த காலங்களில் காணப்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக தற்போது நிதிநெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அதனை நடத்திச் செல்வதில் பிரச்சினை உள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts