முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
செல்லுபடியற்ற QR ஐ பயன்படுத்தி, எரிபொருள் பெறுவதற்கு முயன்ற நிலையில் முகாமையாளர் எரிபொருள் வழங்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபர் ஒருவர் எரிபொருள் நிலையத்திற்குள் அத்துமீறி உள் நுழைந்து முகாமையாளரை தாக்க முயன்ற வரை இடை மறித்துள்ளார்.
இதன்போது முகாமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்த கதிரைகளை தூக்கி வீசி விட்டுச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நடைபெரும் பொழுது புதுக்குடியிருப்பு பொலிசார் எரிபொருள் நிலையத்தில் கடமை புரிந்துள்ளனர். அதனையும் பொருட்படுத்தாது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த உதவி முகாமையாளர், தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.