எரிபொருள் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் கா.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய எரிபொருள் வழங்கப்பட வேண்டும் அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை ஒதுக்குமாறும் கோரியே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஆசிரியர்கள் பதாதைகளை ஏந்தியும் கோஷமெழுப்பியும் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

Related Posts