எரிபொருளின் விலை நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், பெட்ரோலின் விலை 10 ரூபாயாலும், டீசலின் விலை 7 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டர் 155 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக குறைவடைகிறது. அத்துடன் டீசலின் விலை 123 ரூபாயிலிருந்து 116 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், முச்சக்கரவண்டி மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் குறைவடையுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.