எரிபொருளின் விலையினை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவிப்பு!

இலங்கையில் எரிபொருளின் விலையினை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையில் அரசாங்கம் நட்டத்தில் கச்சா எண்ணையை வழங்கி வருவதாகவும் அதனை ஈடுசெய்ய எதிர்காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts