எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

எரிபொருட்களின் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இந்த விலையேற்றம் இடம்பெறுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 92 ஒக்றேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 95 ஒக்றேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts