எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது.

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. 92 ஒக்ரின் பெற்றோல் 117 ரூபாவாகவும் , 95 ஒக்ரின் பெற்றோல் 128 ரூபாவாகவும், டீசல் 95 ரூபாவாகவும், மண்ணெண்ணை 65 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Related Posts