ஆகஸ்ட் 10ஆம் (இன்று)திகதி முதல் 13ஆம் திகதி வரை எரிகல் பொழிவை இலங்கையில் காண முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல்துறை பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று 10ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த எரிகல் மழை பொழிவின்போது வானம் தெளிவாகக் கறுப்பாகக் காணப்பட்டால் மணிக்கு 60 முதல் 100 கற்கல் வீதம் பூமியை நோக்கி வருவதைப் பார்க்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல்துறை பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி அதிகாலை 3 மணிமுதல் 5 மணி வரையான நேரப்பகுதியிலேயே இந்த எரிகல் பொழிவைத் தெளிவாகக் காணமுடியும் என்றும், வானத்தின் வடகிழக்குப் பகுதியில் சமாந்தரமாக 45 பாகையில் தெரியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
11ஆம் 13ஆம் திகதிகளில் எரிகல் பொழிவு சற்றுக் குறைவாகவே காணப்படும் எனச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், தொலைகாட்டியின் உதவியெதுவுமின்றி தரையில் படுத்திருந்து இதனைப் பார்க்க முடியும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த எரிகல் பொழிவுக்கு ‘பேர்சைட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.