எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினர் சுருதியை அணுகி கேட்டபோது உடனே சம்மதித்தாராம். இன்டர்நெட் மூலம் இந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

shruti-hasan

சுருதிஹாசன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசுகிறார். அவற்றை வீடியோவில் பதிவு செய்து இணைய தளங்களில் வெளியிடுகின்றனர்.

சுருதி தமிழில் விஜய் ஜோடியாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் பிசியாக நடிக்கிறார். இடையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்துக்கும் நேரம் ஒதுக்குகிறார்.

Related Posts