எம்.பிக்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மேலும் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மேலும் அதிகரிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு தொகையால் அதிகரிக்கப்படவுள்ளது என்பதைக் குறிப்பிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்தம் 50 இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிக்கு வந்த அரசு சமர்ப்பித்த இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒரு கோடி ரூபாவாக அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த நிதியை மேலும் அதிகரிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் நேற்றுக் குறிப்பிட்டார்.

Related Posts