எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி!

இந்தியாவிலுள்ள கர்நாடக இசைப்பாடகிகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமி முக்கியமானவர். இவர் இந்தியாவில் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தி புகழ் பெற்றவர்.

rahman

1966-ம் ஆண்டில் ஐ.நா.சபையில் பாடினார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்நிலையில், அவரது 100-வது பிறந்த தினத்தை ஐ.நா.சபை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சியின்போது ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரியும் நடை பெற உள்ளதாம். அப்போது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறதாம். இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவிலுள்ள இசைக்கலைஞர்கள் மட்டுமின்றி அயல்நாடுகளில் உள்ள பிரபல இசைக்கலைஞர்களும் அழைக்கப்பட உள்ளார்களாம்.

Related Posts