எம்ஜிஆரும், சிவாஜியும் சேர்ந்த கலவையாம் தனுஷ்!

கயல் படத்தை அடுத்து தனுஷை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் தொடரி. தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி முடிவாகவில்லை. இந்த படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றபோது, தனுஷ், கீர்த்தி சுரேஷை ஆகிய இருவரையும் மேடையில் பேசியவர்கள் மானாவாரியாக புகழ்ந்து தள்ளி விட்டனர்.

Dhanush-Thodari-Story-Leaked

அப்போது தனுஷைப்பற்றி பேசும்போது, இவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவரையும் சேர்த்து செய்யப்பட்ட கலவை. அந்த அளவுக்கு அவரது நடிப்பு யதார்த்தமான உள்ளது. அவரை மாதிரி ஒரு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவில் இல்லை. அந்த வகையில் ஹாலிவுட் தரமுள்ள ஹீரோ என்றார்கள். அதோடு, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் இளைய சூப்பர் ஸ்டார் என்று கோஷம் போட, மேடையில் பேசியவர்கள் இந்த படத்தில் இருந்து தனுசுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அதையடுத்து பட நாயகி கீர்த்தி சுரேஷை புகழுபோது, இவர் சாதாரண அழகியல்ல. ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகிய மூன்று பேரையும் மிக்சியில் போட்டு அரைத்து உருவாக்கப்பட்டவர்தான் இவர். இவரது பெற்றோர் ஒரே பெண்ணோடு குடும்பக்காட்டுப்பாடு செய்து கொள்ளாமல் டஜன் கணக்கில் பெற்று கலைச்சேவைக்கு இறக்கிவிட்டிருக்க வேண்டும் என்றார் பார்த்திபன். அதன்பிறகு பேசியவர்கள், ரேவதி இடத்தை பிடிக்கப்போகிறவர் கீர்த்தி சுரேஷ். அதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது என்றனர். இதையெல்லாம் கேட்டு தனுஷ்-கீர்த்தி சுரேஷ் இருவரும் வாயை பொத்தியபடி சிரித்துக்கொண்டிருந்தனர்.

Related Posts