எமியுடன் ஜோடி சேரும் விஜய்சேதுபதி?

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி – நயன்தாரா நடித்த படம் ‛நானும் ரவுடிதான்’. இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் அதே கூட்டணியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார் விக்னேஷ்சிவன். அதோடு, புதிய படம் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால், இதுவரை இணைந்து நடிக்காத திரிஷா-நயன்தாரா ஆகிய இருவரையும் அந்த படத்தில் இணைக்க முயற்சி எடுத்தார் விக்னேஷ்சிவன்.

sethupathy-ami-jakson

ஆனால், அதுகுறித்து திரிஷாவை அவர் அணுகியபோது, கதையைகூட கேட்காமல் தான் பல படங்களில் பிசியாக இருப்பதாக சொல்லி நழுவி விட்டாராம். அதனால் வேறு சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்த அவர், இப்போது எமி ஜாக்சனை புக் பண்ணியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக, ஆரம்பத்தில் பிரபலமில்லாத ஹீரோயின்களுடன் நடித்து வந்த விஜய்சேதுபதி, நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுடன் நடித்த பிறகு தர்மதுரையில் தமன்னாவுடன் நடித்திருக்கிறார். தற்போது ஆண்டவன் கட்டளையில் ரித்திகா சிங்குடன் நடித்து வருபவர், அவரைத் தொடர்ந்து எமிஜாக்சனுடனும் நடிக்கப்போகிறார். இதேபோல் அவரது புதிய படங்களிலும் பிரபலமான கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Related Posts