எமது வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டது: அங்கஜன்

எமது பிரதேச வேட்பாளர்களின் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டதெனவும் நீங்கள் அளிக்கும் வாக்குகள் எமது வாக்குறுதிகளை உறுதியாக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சுதுமலை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச செயற்பாட்டு அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேச சபையில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ‘யதார்த்த நிலைமைகளை புரிந்து கொண்டு உங்களின் எதிர்காலம் பொருளாதார ரீதியாகவும் பிரதேச ரீதியாக முன்செல்ல வேண்டும் எனவும், மானிப்பாய் பிரதேசமும் யாழ் மண்ணின் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் தெரிவித்தார்.

உங்கள் பிரதேசத்தில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆணை வழங்குங்கள் உங்கள் வாழ்வு வளமாவதோடு, கிராமத்தின் கை கோர்ப்பு எமது எதிர்கால இளைஞர்களிடம் சிறந்த சந்ததிகளை தோற்றுவிக்கக்கூடிய முறையிலும் அபிவிருத்தியடைந்த நாடாக மிளிர முடியும்.

வாக்குகளை மனதார வழங்குவதோடு, பெப்ரவரி 10 ஆணையிடுங்கள் அந்த வாக்கு பலத்தின் மூலம் புதிய உறவுப்பாலங்களையும் எமது இலக்கு நோக்கிய பயணத்தோடு நானும் உங்களோடு சேர்ந்து பயணிப்பேன்’ எனவும் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Related Posts