எமது தந்தை ஒரு திருடன் – நாமல்

எங்கள் தந்தை ஒரு திருடன். அவர் எவற்றைத் திருடியுள்ளார் என்பதை புதன்கிழமை (06), மெதமுலனையில் வைத்து கண்டுகொண்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

namal-rajapaksha

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாமல், ‘எங்கள் தந்தை, மக்களின் இதயங்களையே திருடியுள்ளார். அவ்வாறு திருடப்பட்ட இதயங்கள், நேற்று மெதமுலனைக்கு வந்தபோது நாம் கண்டுகொண்டோம்’ என்றார்.

‘எங்களுக்கு முன்னால் பாரியதொரு சவால் உள்ளது. நாட்டின் இறைமையை ஒழித்து நாட்டை கூறுபோட பாரிய சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனை நாம் முறியடிக்க வேண்டும்.

திருடர்களைப் பிடிப்பதே நல்லாட்சி என்றார்கள். எங்கள் தோட்டங்களுக்குள் புகுந்து லம்போகினிகளையும் விமானங்களையும் தேடினார்கள். ஆனால், அவை எவையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை’ என்று நாமல் மேலம் கூறினார்.

Related Posts