எபோலா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க நாட்டுக்கு வருவோருக்கு வழங்கப்படும் நுழைவு விசா தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆபிரிக்காவைச்சேர்ந்த நைஜீரியா, சியரா லியோன், மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைதருவோருக்கான நுழைவு விஸா வழங்கும் நடைமுறையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.