என் ரசிகர்கள் மிகப்பெரிய உயரத்திற்கு வர வேண்டும் – தெறி விழாவில் விஜய்

புலி படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தெறி. ராஜா ராணி இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள இப்படம் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். முக்கிய ரோலில் மீனாவின் மகள் நைனிகா, விஜய்யின் மகளாக நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாய் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவரின் 50வது படமாகும். அதனால் அதிக சிரத்துடன் தெறி படத்தின் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

theree

தெறி படத்தில் மொத்தம் 7 பாடல்கள். இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் விஜய், எமியுடன் பிரபு, மீனா, அவரது மகள் நைனிகா, டைரக்டர் மகேந்திரன், தாணு, பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசை வௌியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியாதவது…

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி. இப்போது ஹீரோவாக மாறியிருக்கிறார். இன்றைக்கு இருக்கும் வெர்ஜின் இளைஞர்களின் ஹீரோ அவர் தான். இதுநாள் வரை ஜிவி.யின் ஸ்டுடியோவில் ஒலித்து கொண்டிருந்த தெறி பாடல் இப்போது உலகம் முழுக்க ஒலிக்க தொடங்கியிருக்கிறது.

என் படத்தில் மகேந்திரன்

இயக்குநர்களின் ஹீரோவாக இருந்தவர் மகேந்திரன். உதிரிப்பூக்கள் போன்ற படங்களை கொடுத்தவர் படத்தில் நான் நடிக்க மாட்டேனா என்று எண்ணியிருந்த நிலையில், அவர் என்னுடைய படத்தில் நடித்தது மகிழ்ச்சி, பெருமை.

சமந்தா – செல்பிபுள்ள, எமி – குல்பிபுள்ள

இந்தப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் செல்பிபுள்ள சமந்தா, மற்றொருவர் குல்பிபுள்ள எமிஜாக்சன். படத்தில் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மீனாவின் மகள் நைனிகா இந்த படத்தில் எனக்கு மகளாக நடித்திருக்கிறார்.

அட்லியின் வெறி இந்த தெறி

ராஜாராணி என்கிற ஒரு அழகான காதல் படத்தை கொடுத்த அட்லி, என்னை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை கொடுக்க வேண்டும் என்ற வெறிதான் இந்த தெறி. அவர் இந்த வயதில் எட்டியிருக்கும் உயரம் மிகவும் பெரியது. அவரைப்போன்றே இன்றைக்கு நிறைய இளம் இயக்குநர்கள் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள்.

ரசிகர்களுக்கு அறிவுரை

என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும். பிறர் அடைந்த உயரத்தை உங்கள் இலக்காக வைக்காதீர்கள் அடுத்தவர்களுக்கு நீங்கள் இலக்கு நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் நீங்கள் அனைவரும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். கர்வத்தை விட்டு வாழ கற்று கொள்ளுங்கள்.

இவ்வாறு விஜய் பேசினார்.

Related Posts