‘என் படத்தை ரஜினி சார் பார்ப்பாரா?’ ஜாக்கிசான்

நான் நடித்துள்ள ஸ்கிப் ட்ரேஸ் படத்தை ரஜினி சார் பார்ப்பாரா? என்று கேட்டுள்ளார் நடிகர் ஜாக்கி சான்.

ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிரேஸ் ( SKIP TRACE ) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் கோடிக் கணக்கில் வசூலைக் குவித்துள்ளது.

jackie-rajini

இதுவரை சீனாவில் மட்டுமே ரூ 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இந்தப் படம் தமிழில் ‘இரு கில்லாடிகள்’ என்ற பெயரில் வெளியாகிறது.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆங்கிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக இரு கில்லாடிகள் படத்தை செப்டம்பர் 2 ம் தேதி வெளியிடுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை வெளியான அன்றே திரையரங்கிற்கு சென்று பார்த்து பாராட்டினார் ஜாக்கிசான். அவர் நடித்த (SKIP TRACE ) படமும் அன்றுதான் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

வருகிற செப்டம்பர் 2 அன்று வெளியாகும் இந்த இரு கில்லாடிகள் படத்தை ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்ப்பாரா?’ என்று ஜாக்கிசான் ஆவலாக உள்ளதாக அவரது தரப்பிலிருந்து கேட்டுள்ளனர்.

Related Posts