என் படத்தில் நீ நடிக்கக் கூடாது. நீ ‘தல’ ஆள் தானே: பிரேம்ஜியிடம் கூறிய விஜய்

நீ என் படத்தில் நடிக்கக் கூடாது, நீ தல ஆள் என எனக்கு தெரியும் என்று இளைய தளபதி விஜய் பிரேம்ஜி அமரனிடம் தெரிவித்துள்ளார்.

vijay-premji

மங்காத்தா படம் அஜீத்துக்கும் சரி, வெங்கட் பிரபுவுக்கும் சரி மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. மங்காத்தா படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த விஷயம் தற்போது அவர் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.

விருந்துக்கு வெங்கட் பிரபு மட்டும் சென்றுள்ளார்.

வெங்கட் பிரபுவை பார்த்த விஜய் உங்க தம்பி பிரேம்ஜி வரவில்லையா? அவருடன் சேர்ந்து என் குழந்தைகள் புகைப்படம் எடுக்க விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

விஜய் கூறியதையடுத்து வெங்கட் போன் செய்து பிரேம்ஜியை வரவழைத்துள்ளார். அவருடன் விஜய்யின் மகனும், மகளும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

உன் அண்ணன் படங்கள் தவிர்த்து பிற இயக்குனர்களின் படங்களிலும் நடி. அது தான் உனக்கு நல்லது. புதுப் புது அனுபவமும் கிடைக்கும் என்று விஜய் பிரேம்ஜி அமரனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

வெங்கட் பிரபு என்னை வைத்து படம் இயக்கினால் அதில் நீ கண்டிப்பாக நடிக்கக் கூடாது என்று விஜய் பிரேம்ஜியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த படத்தின் இசையமைப்பாளர் நீ தான். நீ தல ஆள் என்று எனக்கு தெரியும் என விஜய் பிரேம்ஜியிடம் கூறியுள்ளார்.

Related Posts