கமல் படம் வருகிறது என்றால் கூடவே பிரச்சனைகளும் வரிசை கட்டி வரும்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் கமல்.
இதில் இவர் பேசுகையில் ‘இங்கு மத்திய அரசின் தணிக்கை குழுவினர் வந்திருப்பதாக கூறினார்கள். நான் ஒரு போதும் சென்ஸாருக்கு பயந்தது இல்லை.தவறு செய்பவர்களே பயப்பட வேண்டும்.
என் படத்திற்கு சான்றிதழ் வழங்கிய பிறகு தான் எப்போதும் பிரச்சனை ஆரம்பிக்கும்’ என தெரிவித்துள்ளார்.