என் தம்பி விஜய் படத்தை போடுங்கப்பா: அஜீத்

மங்காத்தா படத்தில் விஜய் ரெபரன்ஸ் வைக்குமாறு அஜீத் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படம் சூப்பர் ஹிட்டானது அனைவரும் அறிந்ததே.

அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் வெங்கி தயாராக உள்ளார். இந்நிலையில் படம் குறித்து வெங்கட் பிரபு அண்மையில் கூறுகையில்,

மங்காத்தா படத்தில் மும்பை தியேட்டரில் படம் ஓடும் காட்சியை எடுக்க வேண்டும். தியேட்டரில் யாருடைய படத்தை ஓட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.

எந்த நடிகரின் படத்தை தேர்வு செய்வது என நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது வந்த அஜீத் என் தம்பி விஜய் படத்தை போடலாமே என்று தெரிவித்தார். அதன் பிறகே காவலன் படத்தை போட்டோம் என்றார் வெங்கட் பிரபு.

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தில் அஜீத்தின் விளையாடு மங்காத்தா பாடல் வரும். இப்படி தல, தளபதி ஒற்றுமையாக உள்ளனர்.

இனி தனது படங்களில் அஜீத் ரெபரன்ஸ் இருக்காது என்று சிம்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனுஷின் கொடி படத்தில் அஜீத் ரெபரன்ஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts