என் சாவுக்கு இலங்கை அரசே காரணம்!

ஜெயலலிதா தொடர்பில் இலங்கை படையினரால் வெளியிடப்பட்ட அவதூறு கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சேலம் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி பிரமுகர் ஒருவர் தற்கொலைசெய்துகொள்ள முயன்றுள்ளார்.

indian-women-suside

தற்கொலை தொடர்பில் அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் :-

மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் தமிழகத்துக்கும் தாய், எங்கள் குடும்பத்துக்கும் தாய். இந்தியா முழுவதும் அம்மாவை பெருமைப்படுத்தி பேசுகிறார்கள்.

ஆனால் இலங்கை அரசு மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களையும், மோடி அவர்களையும் தவறாக சித்தரித்து இருக்கிறது.

இதற்கு இலங்கை அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், இந்த பிரச்சினையால் நான் மனம் உடைந்து போய் விட்டேன். எனவே என் தற்கொலைக்கு காரணம் இலங்கை அரசு என்று அதில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts