என் காலை தொட்டு கும்பிடாதீர்கள், அமைச்சர்களுக்கு மோடி வேண்டுகோள்

என் காலையோ இல்லை வேறு ஏதாவது தலைவர்களின் காலையோ தொட்டு கும்பிடாதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

modi

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மோடி கூறுகையில், என் காலையோ இல்லை வேறு ஏதாவது தலைவர்களின் காலையோ தொட்டு கும்பிடாதீர்கள் என்றார்.

வட இந்தியாவில் தலைவர்கள் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கும் பழக்கம் உண்டு. சுமித்ரா மகாஜன் லோக்சபா சபாநாயகராக இன்று பதவியேற்றபோது கூட அவர் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காலை தொட்டு ஆசி பெற்றார். இந்த பழக்கத்தை தான் நிறுத்துமாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சர்கள் என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது பற்றி மோடி அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts