என் கவர்ச்சி மற்றவர்கள் கண்களை உறுத்துகிறது!- ஸ்ருதி

ஸ்ருதிஹாசன் ‘3’ படத்தில் பெர்ஃபார்மென்ஸுக்கு பெயர் எடுத்ததை விட அவரது ஹாட் ஃபோட்டோக்களால் பெயர் எடுத்ததுதான் அதிகம். முக்கியமாக, ஆண்டுக்கு இரண்டு முறையாவது ஆங்கில பத்திரிகைகளின் அட்டைகளை படு சூடாக அலங்கரிப்பார்.

Shruthi Hassan

இதனால் இந்து அமைப்புகளும், மாதர் சங்கங்களும் அவருக்கு எதிர்ப்புக் கொடி பிடித்து வருகின்றன.

அப்பாவுடன் இணைந்து நடிக்கும் சபாஷ் நாயுடுவிலும் கிளாமர் அவதாரம் எடுத்திருக்கிறாராம். இதுகுறித்து கேட்டதற்கு, ‘நான் இயற்கையிலேயே கவர்ச்சியான உடலமைப்பை கொண்டிருப்பதால், சாதாரண உடையிலும், அதிக கவர்ச்சியாக தெரிகிறேன்; அதுதான், மற்றவர்களின் கண்களை உறுத்துகிறது.
மற்றபடி, நான் எப்போதுமே கவர்ச்சிக்காக வைத்திருக்கும் எல்லைக்கோட்டை தாண்டியதில்லை; தாண்டவும் மாட்டேன்…’ என்று பதில் அளித்திருக்கிறார்.

அதானே… யரரோட பொண்ணு?

Related Posts