என் இடுப்பை கிள்ளினார்கள்… சிவகார்த்திக்கேயன் ரெமோ ரகசியம்

என்னை நிஜ கதாநாயகி என்று நினைத்து படப்பிடிப்பு தளத்தில் என் இடுப்பை கிள்ளினார்கள் என்று நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார். ரெமோ படத்தில் சிவகார்த்திக்கேயன் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

REMO-SIVA-KARTHTHEKEYAN

இதில் அழகு தேவதையாக காட்சி தருகிறார் சிவகார்த்திக்கேயன். அழகாக கதாநாயகி கீர்த்தி சுரேஷை விட சிவகார்த்திக்கேயன்தான் அழகாக இருக்கிறார். பெண்ணாக நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் அனுபவம் எப்படி இருந்தது என்று போஸ்டர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கேட்டார்.

சூட்டிங் முடிந்து எப்படி வந்திருக்கிறது என்று மானிட்டர் பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னை நிஜ கதநாயகி என்று நினைத்து யாரோ என்னுடைய இடுப்பை பிடித்து கிள்ளினார்கள். எனக்கு அது கூட பெரிதாக தெரியவில்லை அந்த அளவிற்கு இங்கே காய்ந்து போயிருப்பது யார் என்றுதான் எனக்கு தோன்றியது என்றார் சிவகார்த்திக்கேயன்.

என் மகளிற்கு என்னை விட ரெமோ ஆன்டியைத்தான் ரொம்ப பிடிக்கும். என்னிடம் போனில் பேசும் போதே ரெமொ ஆன்ட்டி கிட்ட போனை கொடுங்க என்று கேட்பாள், நான் உடனே போனை மாற்றி வைத்து குரலை மாற்றி பேசி சமாளிப்பேன் என்றார் சிவகார்த்திக்கேயன்.

விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பின் போது என்னை நிஜ கதாநாயகி என்றே நினைத்து என் பெயரை கேட்பார்கள். நான் அனுஷ்காவின் தங்கச்சி என்று சொல்லி சமாளிப்பேன் என்றும் சுவாரஸ்யமாக தனது படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் சிவகார்த்திக்கியேன்.

Related Posts