என்.ஆர்.எவ்.சி. மற்றும் ஆர்.எவ்.சி. கணக்கு விதிகளில் தளர்வு

வெளிநாட்டு நாணயங்களை சம்பாதிப்பவர்கள் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (என்.ஆர்.எவ்.சி) வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (ஆர்.எவ்.சி) இடையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இவ்விதி திங்கட்கிழமை(9) முதல் அமுலுக்கு வருகிறது.

எனினும் இலங்கையிலுள்ள சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் பணம் ஏற்கெனவே அமுலில் இருந்த விதிகளுக்கிணங்கவே வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு, அல்லது வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைப்பிலிட முடியும்.
புதிய விதிகளின்படி 18 வயதுக்கு குறைந்தவர்களும் இக்கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

Related Posts