என்னை நடிகை ஆக்கியது தமிழ் சினிமா – எமி ஜாக்சன்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ‘பிசி’யாக நடித்துக் கொண்டிருப்பவர் எமிஜாக்சன். அவர் தனது நடிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

தங்கமகன் படத்தில் தனுசுடன் நடித்தது ஜாலியான அனுபவம். நான் நன்றாக நடிப்பதற்கு அவர் உதவினார். எந்த மொழி படமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்வேன். வசனங்களை புரியும்படி எழுதி வைத்துக் கொண்டு படிக்கிறேன். என்னை நடிகை ஆக்கியது தமிழ் படம்தான்.

முதலில் மாடலிங். விளம்பர படங்களில் நடித்தேன். ‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் நடிகை ஆனேன். இதுதவிர தமிழில் தாண்டவம், ஐ, தங்கமகன் படங்கள் திரைக்கு வந்துள்ளன. ‘கெத்து’ ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. விஜய்யுடன் ‘தெறி’, ரஜினியுடன் ‘2.0’ படங்களில் நடித்து வருகிறேன்.

தமிழ் ரசிகர்கள் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். அவர்களுடைய ஆதரவுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னை இந்திய பெண்ணாகவே நான் பார்க்கிறேன்.

சென்னையில் எனக்கு பிடித்த இடம் மெரீனா கடற்கரை. புதுச்சேரியும் எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.

தங்கமகன், தெறி படங்களில் சமந்தாவுடன் இணைந்து நடித்தேன். அவர் பழகுவதற்கு இனிமையானவர்.

‘கெத்து’ படத்தில் எனக்கு ஐயங்கார் பெண் வேடம். இயக்குனர் திருக்குமரன் எனது நடை, உடை பாவனை அனைத்தையும் மாற்றி விட்டார். இதில் நான் உதயநிதிக்கு சரியான ஜோடியாக இருப்பேன் என்று நம்புகிறேன். இந்த படத்தில் அனுபவித்து நடித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Related Posts