முன்னாள் புலி உறுப்பினர்கள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள்புலி உறுப்பினர்கள் சிலர் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
அண்மையில் இவ்வாறு முயற்சி மேற்கொண்ட புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். எனவே எனது பாதுகாப்பிற்கு மேலும் சில பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது பொருத்தமானது.
எனது பாதுகாப்பிற்கு நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. குறைந்தபட்சம் இன்னும் மூன்று நான்கு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட வேண்டும்.
எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோருகின்றேன். என கருணா தெரிவித்துள்ளார்.