என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ள அருண் விஜய் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித், திரிஷா, அனுஷ்கா, பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாரின் மகன், அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் (அது சஸ்பென்ஸ்).
இன்று அதிகாலை ஷோவை தியேட்டரில் பார்ப்பதற்காக சென்ற அருண் விஜய் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து தியேட்டரிலேயே கண் கலங்கி அழுதார்.
இதை ரசிகர்கள் பார்த்து போட்டோ எடுத்தனர். தடயற தாக்க திரைப்படத்தில் உடலை வருத்தி நடித்த போதே அருண் விஜய் தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் அதில் கிடைக்காத அங்கீகாரம், எனக்கு தல படத்தில் கிடைத்துவிட்டது என்று உணர்ச்சி பொங்க கூறினார் அருண் விஜய்.
தனது டிவிட்டர் தளத்தில் இதுகுறித்து அருண் விஜய் கூறுகையில், “அஜித் சாருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை.
திரையில் எனக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த வெற்றி அஜித் இல்லாமல் சாத்தியமில்லை” என்றும், மற்றொரு டிவிட்டில் “எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த கவுதம் மேனனுக்கு பெரிய நன்றி” என்றும் கூறியுள்ளார்.