இலங்கை சிறையில் குற்றவாளியாக அஜித்?

என்னை அறிந்தால் தலைப்பு வைத்ததுமே சமூக வலைத்தளங்களில் தல ரசிகர்கள் ட்ரண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதை தொடர்ந்து படத்தின் கதை இது தான் என்று வைரலாக ஒரு கதை பரவி வருகிறது.

Ajith-Yennai-Arenthal

இதில் ‘ அஜித் இலங்கை சிறையில் குற்றவாளியாக இருப்பவராம், இவரின் வளர்ப்பு அப்பா உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர். கார்ப்ரேட் கம்பெனிகளால் அஜித்தின் வளர்ப்பு அப்பாவுக்கு ஆபத்து ஏற்படுகிறது இதனால் அவர் கொல்லப்படுகிறார்.

அவருக்கு அடுத்து இந்த சொத்தை ஆளப்போவது யார் என்ற கேள்வி வரும்போது அஜித் என்ற வளர்ப்பு மகன் இருப்பதாக தகவல் தெரிகிறது. அதுவும் இலங்கை சிறையில் இருப்பதாக தகவல் வர அவரை எப்படியாவது வெளியே கொண்டுவந்துவிடுகிறார்கள்.

வந்தவர் தன் அப்பா இயற்கையாக சாகவில்லை, கொல்லப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரியவருகிறது அதன்பின் அஜித் வில்லன்களுடன் ஆடும் ருத்ரதாண்டவம் தான் மீதிக்கதை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது உண்மையா என்பதை அறிய விரைவில் கௌதம் மேனன் இதுகுறித்து பேசினால் தான் தெரியும், அல்லது படம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

Related Posts