“என்னுடைய இடமாற்றத்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” : இமெல்டா சுகுமார் கவலை

யாழ்.அரச அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு இடமாற்றம் வரும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லையென்று, கவலையுடன் யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய இடமாற்றத்தை ஜனாதிபதியே மேற்கொண்டுள்ளதால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்.அரச அதிபராக கடமையாற்றிய திருமதி இமெல்டா சுகுமாரை உடனடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்ய, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில்  யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.அரசிற்கு விசுவாசமாகவும் அதேவேளை, என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலும் மக்களுக்கு சிறந்த சேவையாற்றிவரும் நிலையில், ஒரு இடமாற்றம் எனக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் ஒரு அரச அதிகாரி என்ற வகையில் என்னுடைய இடமாற்றம் தவிர்க்க முடியாதது நிர்வாக சேவையில் மூத்த அதிகாரி என்ற வகையிலேயே எனக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று எனக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts