என்னிடம் வரும் அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த தேவைகள், உறவுகள் சார்ந்த வேலைகளைப் பேசவே என்னிடம் வருகின்றார்கள். மாறாக வடக்கில் பாாிய பிரச்சினையாக மாறியுள்ள குடிநீா் பிரச்சினைக்கு தீா்வினை காண் பதற்கு வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவரும் ஒரு திட்டத்தை கூட முன்வைக்கவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அவர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கில் ஆறுகள் இல்லை. காலம் காலமாக மழையை நம்பியே மக்கள் விவசாயம் செய்தனர். மழை நீரைக் குளங்களில் சேகரித்தனர். ஆனால் அந்தக் குளங்கள் தற் போது என்ன நிலையில் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.
பல குளங்கள் காணாமல் போய் விட்டன. வடக்கு – கிழக்குத் தமிழர் தாயகம் என்று அரசியல் பிரமுகர்கள் கூறிக் கொள்கின்றனர். ஆனால் மனிதனுக்குப் பிரதான விட யம் இந்தக் குடி தண்ணீர்.
வடக்கில் உள்ள தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வது தொடர்பாக அல்லது அதற்காக திட்டம் இருக்கின்றது, அதை நடை முறைப்படுத்த உதவுங்கள் என்று எந்த அரசியல்வாதிகளும் என்னிடம் வந்தது இல்லை.
பொதுமக்கள் சந்திப்பில் மக்களின் துன்பங்கள், தேவைகள் எமக்குத் தெரிகின்றன. அவற்றில் சில விடயங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும். தண்ணீர் போன்ற விடயங் கள் நாடாளுமன்றில் பேசப்பட வேண்டும்.
அப்போதுதான் வேலைகளை நகர்த்த முடியும். என்னிடம் வரும் அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த தேவைகள், உறவுகள் சார்ந்த வேலைகளைப் பேசவே என்னிடம் வருகின்றார்கள்.
இந்த தண்ணீர் விடயம் தொடர்பில் அதன் அவசியம், இருப்புத் தொடர்பில் நான் கிட் டத்தட்ட 4 அரசியல்வாதிகளுக்கு கூறினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கான திட்டங்கள் கூட அவர்களிடம் இருக்கலாம். அவற்றை எங்களிடம் தந்து துறைசார்ந்த நிபுணர்களோடு ஆலோசித்தால்தான் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் – என்றார்.