என்கவுண்டர் பண்ணும் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி!

தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு அருண் வைத்திய நாதன் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வரும் நிபுணன் படத்தில் என்கவுண்டர் பண்ணும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வரலட்சுமி.

varalaksumi-

பெரும்பாலும் தான் நாயகனாக நடிக்கும் படங்களில் அர்ஜூன்தான் இந்த மாதிரி வேலைகளை செய்வார். ஆனால் இந்த படத்தில் அவரை மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கவைத்துள்ள அருண் வைத்தியநாதன், வரலட்சுமிக்கு காக்கி சட்டை மாட்டி விட்டு, துப்பாக்கியை கையில் கொடுத்துள்ளார். அதன்காரணமாக போலீஸ் கெத்துடன் படம் முழுக்க நடித்துள்ள வரலட்சுமி ஆக்சன் காட்சிகளிலும் பறந்து பறந்து அடிக்கிறாராம்.

அதோடு, இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகி வருவதால், தாரை தப்பட்டையில் தனக்கு கிடைத்த பெயர் இந்த நிபுணன் படத்திலும் கிடைக்கும் என நம்புகிறார் வரலட்சுமி.

Related Posts