‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுக்கு இரண்டு கெட்டப்

இளம் ஹீரோக்களில் படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் தனுஷ். பிரபுசாலமனின் தொடரி, துரை செந்தில்குமாரின் கொடி, கௌதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படம், பாலாஜி மோகனின் ‘மாரி 2’ ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இவற்றில், தொடரி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.

danush

துரைசெந்தில்குமார் இயக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது. கௌதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு 20 நாள் கொண்ட முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. துருக்கியில் நடைபெற்ற இந்த 20 நாள் படப்பிடிப்பில், பாடல் காட்சி ஒன்றையும் எடுத்துள்ளார்களாம். இதனைத் தொடர்ந்து விரைவில் சென்னை, மதுரை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் ஒன்றும் உள்ளதாம். அதற்காக பழைய மாடல் கார் ஒன்றையும் வாங்கியுள்ளர் கௌதம் மேனன். இந்த போர்ஷனில் தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

Related Posts