‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இசையமைப்பாளர் யார்?

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் எனும் கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து கவுதம் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ போஸ்டர்கள், டீசர் வெளியான போதிலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து படக்குழுவினர் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

சமீபத்தில் ‘மறுவார்த்தை பேசாதே’ எனும் பாடல் புரோமோ வெளியானதையடுத்து, இசையமைப்பாளர் யார் என்பது அறியாமல் ரசிகர்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர்.

கவுதம் இயக்கிய படங்களில் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, இசைஞானி இளையராஜா போன்ற பிரபலமானவர்களின் பெயரை வெளியிட எவ்வித இடர்பாடுகள் இல்லை என்பதால் இவர்களில் யாரும் இசையமைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஆகையால் புது இசையமைப்பாளருடன் கவுதம் கூட்டணி அமைத்திருப்பதாகவும், அது அனிருத், ஷேன் ரோல்டன், ‘வெப்பம்’ இசையமைப்பாளர் ஜோஷ்வாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும்,ரகுமானின் மகன் அமீன் ரகுமான் அல்லது ‘சக்கை போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கும் கவுதமின் விருப்ப நாயகன் சிம்பு போன்ற புதுமுக இசையமைப்பாளர்களும் ரசிகர்களின் சந்தேக வளையத்தில் உள்ளனர்.

இதனிடையே, பாடலாசிரியர் மதன் கார்க்கி, தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட இசையமைப்பாளர் பற்றி சூசகமாக தகவல் தெரிவித்திருக்கிறார். அவரது டுவீட்டின் படி, இந்தப் படத்துக்கு இயக்குனர் கவுதம் மேனனே இசையமைத்திருக்கிலாம் என்று பலர் யூகித்து வருகின்றனர்.

மேலும், நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பளர், இயக்குனர் என பனுமுகம் கொண்டுள்ள நடிகர் தனுஷ், இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக தனது படத்துக்கு தானே இசையமைதிருக்கலாம் என்றும் பலர் பேசி வருகின்றனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வியின் மூலம் இயக்குனர் கவுதம் மேனன் புது விளம்பர யுக்தியை மேற்கொண்டுள்ளதாகவும் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Related Posts