சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா? என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘பேஸ்புக் தளத்தில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் உள்ளன. டுவிட்டரில் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். இவ்வாறானதொரு நிலையில், நான் எப்படி இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்வேன்’ என்றார்.
அத்துடன், ‘இந்த சமூக வலைத்தளங்களை நான் தடை செய்தால் வீட்டில் எனது மகன்களிடமிருந்தே நான் ஒரு புரட்சியை எதிர்நோக்க நேரிடும்’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.