எனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி – விபூசிகா

என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார்.

vipoosika

மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை(26) அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோதே விபூசிகா இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எனது அம்மாவை பிணையில் எடுப்பதற்காக பாடுபட்ட சட்டத்தரணிகள், என்னை சரியான முறையில் வழிநடத்திய சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், மகாதேவா சைவச்சிறுவர் இல்லம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்றார்.

விபூசிகாவுக்கு தற்போது முதலாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருவதால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையில் அவரை சிறுவர் இல்லத்தில் தங்க வைத்து அதன் பின்னர் தாயாருடன் அனுப்புவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றதாக, கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி எஸ்.விஜயராணி தெரிவித்தார்.

Related Posts