Ad Widget

எனது பிள்ளையின் படுகொலைக்கு நீதி வேண்டும்: கஜனின் தாய் மீண்டும் வலியுறுத்து

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் தனது பிள்ளையின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பல்லைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் கிளிநாச்சி பகுதியை சேர்ந்த நடராசா கஜன் என்ற மாணவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் வாக்குறுதி வழங்கி இருந்த நிலையில், குறித்த வாக்குறுதியில் எவையும் நிறைவேற்றப்படவில்லை என கஜனின் தாய் நேற்று (செவ்வாய்க்கிழமை) தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பல்வேறு முயற்சியின் பலனாக வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடு ஒன்றை பெறுவதற்கு தான் பெற்றுக் கொண்டதாகவும் அந்த வீட்டை கட்டி முடிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, கஜனின் குடும்பத்தினருக்கு வீடு அமைத்து கொடுப்பதாகவும், கல்வி கற்று வீட்டில் உள்ள அவரது உறவினர் ஒருவருக்கு அரச வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் சுவாமிநாதன் உறுதி வழகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றய தினம் உயிரிழந்த மற்ற மாணன் சுலக்சனின் குடும்பத்தாருக்கு புதிய வீடு ஒன்று அமைத்துக்கொடுப்பதற்காக நேற்றய தினம் அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

http://www.e-jaffna.com/archives/85628

Related Posts