எனது கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றேன் -மெல்பேர்னில் சுமந்திரன்

தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றேன் .மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் வெள்ளிகிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள சுமந்திரன் அவர்களுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவங்களை தொடர்ந்து நேற்றைய தினம் மெல்பேர்னில் இடம்பெறவிருந்த நிகழ்வும் அங்கு கூடியிருந்த எதிர்ப்பாளர்களால் தடுக்கப்பட்டது.மாலை 5 மணியளவிலேயே, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு பதாகைகள் சகிதம் வந்திறங்கிய இந்த கூட்டத்தினர், எவரையும் மண்டபத்தின் உள்ளே நுழைய விடுவதில்லை என்று கூறினார்கள்.

இதற்கிடையில், சந்திப்பு இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டு – சுமந்திரனினதும் அவர் பங்குபற்றும் கூட்டத்தில் பங்குபற்றுவோரினதும் – பாதுகாப்பு காரணங்களுக்காக – அழைக்கப்பட்டோருக்கு மாத்திரமான நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்பட்டது.இரவு எட்டு மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் சுமார் முப்பது பேரளவில் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே மேற்படி மன்னிப்பை அவர் கோரியிருந்தார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

“உண்மை எப்போதும் சுடும் என்பார்கள். நான் செய்த தவறும் செய்கின்ற தவறும் என்னென்றால், சுடும் என்று தெரிந்துகொண்டும் சுடுகின்ற பானையை கைகளில் கொடுக்கிறேன் போலுள்ளது. அதனை கொஞ்சம் ஆற்றிக்கொடுத்தால் நன்றாக இருக்குமோ என்று இப்போது நான் எண்ணுகிறேன்.

[otw_shortcode_quote border_style=”bordered” background_color_class=”otw-silver-background”]அப்படியான அசௌகரியங்களுக்குள் மனவேதனைகளுக்குள் பிளவுகளை நான் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் குற்றவாளி. அதற்கு நான் மனம் வருந்துகிறேன். முடியுமானவரை அந்த சூட்டை தணித்து கொடுக்கலாமா என்று ஆராய்கிறேன். இனி அப்படித்தான் செய்வேன் என்று நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. சில சமயங்களில் சுட சுட சொன்னால்தான் அது உண்மையாகவும் இருக்கும்.[/otw_shortcode_quote]

அப்படியான அசௌகரியங்களுக்குள் மனவேதனைகளுக்குள் பிளவுகளை நான் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் குற்றவாளி. அதற்கு நான் மனம் வருந்துகிறேன். முடியுமானவரை அந்த சூட்டை தணித்து கொடுக்கலாமா என்று ஆராய்கிறேன். இனி அப்படித்தான் செய்வேன் என்று நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. சில சமயங்களில் சுட சுட சொன்னால்தான் அது உண்மையாகவும் இருக்கும்.

அதற்காக நான் மட்டும்தான் உண்மை சொல்வதாகவும் நினைக்கவேண்டாம். நான் சொல்கின்ற கருத்துக்கள் தவறாக இருந்தால், எங்கேயும் யாரும், எப்போதும் எடுத்துக்கூறினால் அதனை திருத்திக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அது பற்றி கலந்துரையாடி – உங்களது கருத்து சரியாக இருந்தால் – அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

Related Posts