ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர்.
நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன். இந்த அரசு குறைபாடுகள் இல்லாமல் இல்லை.
போதைப் பொருள் காணப்படுகின்றது அவற்றை நாம் பிடிக்கின்றோம். இவற்றை பத்திரிகைகளில் பிரசூரித்து நாட்டில் போதைப்பொருள் இருப்பதாக பிரச்சாரம் செய்கிகின்றனர்.
கண்களை மூடிக்கொண்டிருந்தால் ஒன்றுமில்லை. பிடிப்பதனால்தான் போதைப்பொருள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்என தராதரம் பாராது நாம் அனைவரையும் நீதிமன்றின் முன் நிறுத்தினோம்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் நீதிமன்றம் தண்டனை விதிக்கும். நான் சட்டத்தரணி என்ற காரணத்தினால் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்துள்ளேன்.
அரசிற்கு எதிரான ஊடகவியலாளர் நாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் கருத்துக்களை வெளியிட எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது இதனால் அனைவரும் சுதந்திரமாக செயற்பட வழியமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.