எந்திரன்–2: அர்னாலுடன் பேச்சு நடத்த அமெரிக்கா செல்லும் ரஜினி

ரஜினியின் ‘கபாலி’ படபிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அங்கு அவர் வலம் வருகிறார்.

rajini-arnol-robo2-entheran

‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்த பிறகு ஷங்கரின் ‘எந்திரன்–2’ படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் ஷங்கர் தீவிரமாக இருக்கிறார். ஹாலிவுட் பட வரிசையில் இதை சேர்க்கும் வகையில் ‘எந்திரன்–2’ படத்தில் ஹாலிவுட் பிரபல நடிகர் அர்னால்டை வில்லனாக நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர் இந்த படத்தில் நடிக்க ரூ. 100 கோடி சம்பளம் பேசியதாகவும், பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் வருகிற 26–ந்தேதி ரஜினி மலேசியாவில் இருந்து அமெரிக்கா செல்கிறார். 4 நாட்கள் அங்கு தங்கி இருக்கும் ரஜினி ஹாலிவுட் நடிகர் அர்னால்டையும் சந்திக்கிறார். அப்போது எந்திரன்–2ல் அர்னால்டு நடிப்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சம்பளம், கால்ஷீட் மற்றும் நிபந்தனைகளை தளர்த்துவது குறித்து அவருடன் ரஜினி பேச இருக்கிறார். இந்த சந்திப்பின்போது பட தயாரிப்பு நிறுவனமான லைகாவின் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

‘எந்திரன்–2’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற இருக்கும் அமெரிக்க ஸ்டூடியோக்களையும் ரஜினி நேரில் பார்வையிடுகிறார். இந்த படத்துக்கான முதல் போட்டோ ஷுட்டும் அங்குள்ள ஒரு ஸ்டூடியோவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டிசம்பர் 1–ந்தேதி ரஜினி மலேசியா திரும்புகிறார். தொடர்ந்து ‘கபாலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Related Posts