எந்தவொரு தொலைபேசி எண்ணையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

அனைத்து அலைபேசி இணைப்பு சந்தாதாரர்களும் தங்கள் அலைபேசி எண்ணை மற்றொரு சேவை வழங்குநரின் இணைப்புக்கு (Number Portability) மாற்றும் சேவைக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றுள்ளனர்.

இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷாத சேனாநாயக்க தெரிவித்தார்.

இன்று காலை ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அனைத்து அலைபேசி சந்தாதாரர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts