2016ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பா தகவல் தெரிவித்த மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் புதிய வாக்காளர் இடாப்புபில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சமாகும்.
2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக வாக்காளரின் எண்ணிக்கை ஒரு கோடி 55 இலட்சத்து 44 ஆயிரத்து 491 ஆகும். வருடாந்த மக்கள் தொகை அதிகரிப்பு ஒன்று தசம் ஐந்து என்று குறிப்பிட்ட அவர் இதற்கமைவாக வாக்காளரின் எண்ணிக்கை வருடாந்தம் இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்தினால் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக உள்ளது. அடுத்த வருடத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை போன்று மூன்று மாகாண சபைக்கான தேர்தலும் நடத்தப்படவுள்ளது.