எதிர் வரும் 27ம் திகதி தகவல் தொழில்நுட்பவியல் பரீட்சை

EXAMவடமாகாணத்தில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு இந்த வருடம் தோற்றவுள்ள மாணவர்களில் பொதுத் தகவல் தொழில்நுட்பவியல் பரீட்சைக்கு 11 ஆயிரத்து 420 பேர் அனுமதி பெற்றுள்ளதாக வடமாகாண தகவல் தொழில்நுட்ப உதவிக் கல்விப் பணிப்பாளர் லெனின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பொதுத் தகவல் தொழில்நுட்பவியல் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் தேசிய தொழில் தகைமை பெற்றிருப்பதுடன் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியுள்ளது.

வடமாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட் சைக்கு தோற்றும் மாணவர்களில் 11 ஆயிரத்து 420 பேர் பொதுத் தகவல் தொழில்நுட்பவியல் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதற்கான முன்னோடிப் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி ஒவ்வொரு பாடசாலைகளிலும் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மறுநாள் பரீட்சை தயார்ப்படுத்தல் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு தேசிய தொழில் தகைமை மட்டம் II இற்கான சான்றிதழும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts