யாழ்.குடாநாட்டில் விவசாயிகளால் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற் செய்கை எதிர்பார்த்த விளைச்சலை ஈட்டிக் கொடுக்கவில்லை. இதனால் தாம் நட்டமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை காலம் பிந்தி நெல் விதைப்பு ஆரம்பித்தமையாலும் அதன் பின்னர் ஏற்பட்ட கடும் வறட்சி, வறட்சியின் பின் கொட்டித் தீர்த்த கடும் மழை ஆகியவற்றினாலும் இம்முறை குடாநாட்டில் கால போக நெற்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும் நட்டமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழைக்கு முன்னர் ஒரு ஹெக்ரேயர் நிலப்பரப்புக்கு சராசரி விளைச்சலாக 70 புசல் நெல்லை எதிர்பார்த்த தாக விவசாய சம்மேளனத்தினர் கூறுகின்றனர்.
ஆயினும் மழையின் பின்னர் தற்போது ஹெக் ரேயருக்கு 50 புசல் நெல்லை விளைச்சலாகப் பெறுவதே கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இம்முறை காலம் பிந்திய நெல் விதைப்பை விவசாயிகள் மேற்கொண்ட மையால் இந்த நெல்லின் அறுவடை பெப்ரவரி நடுப் பகுதியிலேயே ஆரம்பிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த வருடம் பெரும் போக நெற்செய்கையின் போது நல்ல விளைச்சலைப் பெற்றுக் கொண்ட போதும் இம்முறை அவ்வாறு பெற முடியாமல் போனமை குறித்து விவசாயிகள் கவலை வெளி யிட்டுள்ளனர்.