எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன்?

sampanthanஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும்  இணைந்து இணக்கப்பாட்டு அரசு ஒன்றினை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

அதன்போது அமைச்சரவை இருபுறமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.எதிர்க்கட்சிக்குரிய அந்தஸ்தினை 3வது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது அதன் காரணமாக அதன் தலைவர் இரா சம்பந்தன் எதிர்கட்சிதலைவராக தெரிவு செய்யப்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். சபாநாயகராக ஐக்கியதேசியக்கட்சி கரு ஜெயசூரிய நியமிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

இருப்பினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசில் இணையும் பட்சத்தில் இது சாத்தியமாகாது

Related Posts