எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் புதுப்பிப்பதற்காக அரசாங்கம் 8 கோடி 68 லட்சத்து 80 ஆயிரத்து 36 ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இல.30, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தை, கொழும்பு 07 இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகமே புனரமைக்கப்படவுள்ளது.
நேற்று முன்தினம் 30 ஆம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி அலுவலகத்தைப் புனரமைக்க 5 கோடி 82 லட்சத்து 80 ஆயிரத்து 36 ரூபா தேவை என மதிப்பிடப்பட்ட நிலையில் மேலதிகமாக 2 கோடி 84 இலட்சம் ரூபாவை ஒதுக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.