புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார்.
அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்.
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதிலும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை ஒப்படைக்காத நிலையில் புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்பதில் தாமதம் நிலவி வந்தது. அந்தவகையில், மஹிந்த தற்போது அலுவலகத்தை பொறுப்பேற்று கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.